தமிழகம்

‘இந்து தமிழ் திசை’, ஜெம் ஹாஸ்பிடல் வழங்கும் ‘நலமாய் வாழ...’; ‘புற்றுநோய் சிகிச்சை - அன்றும் இன்றும்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி- ஜூலை 11-ல் ஆன்லைனில் நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வீட்டிலேயே இருக்கும்மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை வழங்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், தொடர்ந்து பல்வேறு இணைய வழியேயான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், ஜெம் ஹாஸ்பிடலும் இணைந்து வழங்கும் ‘நலமாய் வாழ...’ எனும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ‘புற்றுநோய் சிகிச்சை – அன்றும் இன்றும்...’ எனும் தலைப்பில் ஆன்லைன் வழியே வரும் 11-ம் தேதி (ஞாயிறு)காலை 11 மணிக்கு நடக்கிறது.

புற்றுநோய் என்றாலே அது குணப்படுத்த முடியாத நோய் என்றஅச்சம் மக்களிடையே உள்ளது. ஆனால், இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால், மருத்துவத் துறையில் பலநவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அறுவைசெய்து பார்த்து, புற்றுநோயின் தாக்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. எண்டோஸ்கோபி எனும்நவீன கருவி மூலமாக எளிதில் கண்டறியலாம்.

புற்றுநோய் தொடர்பான தேவையற்ற பயத்தை நீக்கி, முறையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள அறிவுறுத்தும் வகையில் இந்த ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மருத்துவத் துறையில் 30 ஆண்டுகள் அனுபவமிக்கவரும், லேபராஸ்கோப் சிகிச்சை முறையை முதன்முதலாக தமிழகத்தில் அறிமுகம் செய்தவரும், கோவை ஜெம் ஹாஸ்பிடலின் சேர்மனுமான புகழ்பெற்ற மருத்துவர் சி.பழனிவேலு, ‘புற்றுநோயின் தாக்கம்’ எனும் தலைப்பிலும், சித்த மருத்துவத்தில் 25 ஆண்டுகால அனுபவமிக்க புகழ்பெற்ற மருத்துவரும், ஆரோக்கியா சித்த மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநருமான டாக்டர் கு.சிவராமன், ‘வெல்ல முடியும் புற்றுநோயை’ எனும் தலைப்பிலும், 18 ஆண்டுகால அனுபவமிக்க குடல்புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பா.செந்தில்நாதன், ‘புற்று நோய் சிகிச்சை –அன்றும் இன்றும்...’ எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றுகிறார்கள்.

இந்நிகழ்வில் அனைவரும் பங்கேற்கலாம். கட்டணம் கிடையாது. பங்கேற்க விரும்புபவர்கள் https://bit.ly/3ysukbk லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

SCROLL FOR NEXT