புழுதிவாக்கம் பஸ் நிலையம்மக்களுக்கு முழுமையாக பயன்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கூறினார்.
சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் நேற்று புழுதிவாக்கம், ஷீலாநகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள நூலகக் கட்டிடத்துக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் நலச் சங்கத்தினரின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது குறைந்த மின் அழுத்தம், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புதொடர்பாக பலரும் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் புழுதிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் மயான பூமி, மாநகராட்சி பள்ளிகளில் உள்ள பழைய வகுப்பறைகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புழுதிவாக்கம் 169-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ராம்நகர், சதாசிவம் நகர், அன்னை தெரசா நகர், ஜெயா நகர் போன்ற பகுதிகளில் மழை பெய்தால் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் அதை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கைஎடுப்பதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் சாலைகளை செப்பனிடுவது, மழைநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பது குறித்தும் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து மக்கள் புகார் தெரிவித்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கையை உடனே மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது நலச்சங்க கூட்டமைப்புநிர்வாகிகள் என்.மதிவதனன்,எம்.தமிழ்செல்வன், என்.பாபு, சாமிநாதன், நாகராஜன், 169-வதுவட்ட திமுக பொறுப்பாளர் ஆர்.குமாரசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பின் எம்எல்ஏ கூறியதாவது: புழுதிவாக்கம் பகுதியில் நலச்சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கை மனுக்களைஅளித்தனர். அதன் அடிப்படையில் அந்தந்த பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. புழுதிவாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கப்பட் டுள்ளது.
மேலும் இருக்கை உள்ளிட்ட வசதிகளை செய்ய ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்துக்குள் ரேஷன் கடை, அம்மா உணவகம், கடைகள் போன்றவை உள்ளன. அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் நிலையமும் பேருந்து நிலையத்துக்குள் இருப்பதால் ஏராளமான லாரிகள் வந்து செல்கின்றன. இதனால்பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இதனால் லாரிகள் பேருந்து நிலையத்துக்குள் வராத வகையில் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்படும். இப்பேருந்து நிலையம் மக்க ளுக்கு முழுமையாக பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப் படும்
சித்தேரியைச் சுற்றி மின்விளக்கு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நலச்சங்க நிர்வாகிகள் வழங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கஅதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்.