ஜெம் மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் நலம் பெற்ற சிறுவனுடன், சிகிச்சை அளித்த டாக்டர்கள். 
தமிழகம்

சிறுவனுக்கு பித்தநீர் குழாயில் நுண்துளை அறுவை சிகிச்சை: ஜெம் மருத்துவமனை சாதனை

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு பித்தப்பை குழாய் கட்டியால் அடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் ஜெம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஜீரண மண்டலத்தில் மிகவும் சிக்கலான பகுதியில், சவாலான அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெம் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் குடல் நோயியல் நிபுணர் டாக்டர் பி.செந்தில்நாதன் கூறும்போது, “சாதாரணமாக மனிதனின் கல்லீரல் நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர்வரை பித்தநீரை சுரக்கிறது. இதுபித்தநீர் குழாய் வழியாக இரைப்பைக்கு அனுப்பி வைக்கப்படு கிறது. இச்சிறுவனுக்கு பித்தநீர்குழாயில் நீர்க்கட்டி ஏற்பட்டு அடைப்பு ஏற்பட்டதால் இரைப்பைக்கு செல்லும் பித்தநீரின் அளவு குறைந்தது. இந்த அடைப்பை சரிசெய்யவில்லையென்றால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும்.

மிகவும் சிக்கலான இடத்தில் இருந்த இந்த நீர்க்கட்டி நுண்துளை அறுவை சிகிச்சை மூலம்துல்லியமான முறையில் அகற்றப்பட்டது” என்றார்.

ஜெம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இயக்குநர் டாக்டர் எஸ்.அசோகன் கூறும்போது, “இந்த கட்டியை அகற்ற சரியான சிகிச்சை தேவை.கட்டியை முழுமையாக அகற்றாமல் இருந்தாலோ, பித்தநீரில் கட்டி கலந்து இரைப்பைக்கு சென்றாலோ புற்றுநோய் வர வாய்ப்புஉள்ளது. ஜெம் மருத்துவமனை இத்தகைய சிக்கலான லேப்ராஸ்கோப், ரோபாட்டிக் தொழில்நுட்பத்தில் சிகிச்சை மேற்கொள்ளும் சிறப்பு வாய்ந்தது” என்றார்.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை, லேப்ராஸ்கோப்பி, ரோபாட்டிக் சிகிச்சைநிபுணர் மற்றும் ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு பாராட்டினர்.

SCROLL FOR NEXT