தமிழகம்

கம்யூனிஸ்ட்கள், மதிமுகவுக்கு எச்.ராஜா கண்டனம்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நேற்று பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அப்சல்குருவின் நினைவு நாளன்று நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் அங்கு கோஷமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் சரண் அடைந்துள்ளவர்களில் உமர்காலிக் என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜாவின் மகள் அபராஜிதாவும் நெருங்கிய நண்பர்கள். இதனால்தான் ஐஎஸ் தீவிரவாதத்தையும், கம்யூனிஸ்ட்டையும் ஒப்பிட்டு குற்றஞ்சாட்டினேன். இது தொடர்பாக என் மீது குறை கூறும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், மதிமுகவினருக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சுர்ஜித் கொல்லப்பட்டதற்கு தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், மதிமுகவும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றார்.

SCROLL FOR NEXT