செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள். 
தமிழகம்

சென்னை ஐஐடியில் மர்ம மரணங்கள் மீது நடவடிக்கை கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை ஐஐடியில் மர்ம மரணங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உயர் நீதிமன்றம் விசாரிக்க வலியுறுத்தியும் செங்கல்பட்டில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை ஐஐடியில் கேரளாவைச் உன்னிகிருஷ்ணன் நாயர் (38), எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் அந்தவளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் மர்மமான முறையில் எரிந்த நிலையில் இவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இவர் தற்கொலைசெய்து கொண்டாரா? அல்லதுயாரேனும் எரித்து கொலை செய்தார்களா? என்ற கோணாத்தில் கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை ஐஐடியில் நடைபெறும் சாதிய வன்முறை, இட ஒதுக்கீடு மீறல், மர்ம மரணங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வலியுறுத்தியும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகேதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னணியின் மாவட்ட செயலாளர் கே.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் டி.கோவிந்தன், ஜி.மோகனன், முத்திருப்பன், எம்.ரவி, வி.அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT