தமிழகத்தில் முதல் முதலாக தமிழியக்கத்தின் சார்பில் தமிழர் பொருளாதார மேம்பாட்டுப் பேரவை என்னும் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழியகத்தின் சார்பில் தொடங் கப்பட்டுள்ள தமிழர் பொருளாதார மேம்பாட்டு பேரவையின் செயலாண்மை குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், விஐடி வேந்தரும் தமிழியக்க நிறுவனர் தலைவருமான வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கிப் பேசும்போது, ‘‘தமிழி யக்கம் தொடங்கும்போது ஜாதி என்பதையெல்லாம் கடந்து தமிழர்களை ஒருங்கிணைப்பதும், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுவதும் தான் நமது நோக்கம் என அறிவித்தோம். பொருளாதார மேம்பாடு இல்லாமல் தமிழர்கள் பெரிய அளவில் முன்னேற முடியாது என்ற காரணத்தால் தமிழர் பொருளாதார மேம்பாட்டுப் பேரவை தொடங்கியுள்ளோம். இதில், பொருளாதார பேராசிரியர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், பல்வேறு இயக்கங் களின் பொறுப்பாளர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகள் ஒன்று கூடியிருக்கிறார்கள்.
நம்முடைய வளர்ச்சி வேளாண்மை மற்றும் தொழில் துறையில் அதிகமாக இருக்க வேண்டும். இவை இரண்டுக்கும் அடிப்படையான தேவை தண்ணீர் மற்றும் மின்சாரம். இவை, இரண் டிலும் நமக்குப் பற்றாக்குறை உள்ளது. நீர்நிலைகளை பாது காப்பதில் நாம் தவறிவிட்டோம். ஆறுகள் இணைப்பு நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது.
தொழில்துறையில் பெரிய வளர்ச்சி இல்லை. எந்த வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சி மிக முக்கியம். உயர் கல்வியில் இந்திய அளவில் முன்னிலையில் உள்ள நாம் வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளோம். உலகின் 30 நாடுகளில் உயர்கல்வி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. ஒரு முன்மாதிரியாக தமிழகத்தில் உயர்கல்வி முற்றிலும் இலவசமாக தர வேண்டும்’’ என்றார்.
தொடர்ந்து, தமிழர் பொருளாதார மேம்பாட்டுப் பேரவை செயலாண்மையர் பொருளியல் அறிஞர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் முன்னிலை வகித்துப் பேசும்போது, ‘‘இந்தியாவின் முன்னணி மாநிலம் தமிழ்நாடு. தமிழர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண இந்தப் பேரவை பாடுபடும்’’ என்றார். இதில், தொழிலதிபர் பழனிஜி.பெரியசாமி, ஜெம் கிரானைட்ஸ் வீரமணி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் வி.செல்வராஜ், ஏ.எம்.சுவாமி நாதன், தொழிலதிபர் முனைவர் வி.ஜி.சந்தோஷம், கலைப்புலி எஸ்.தாணு உட்பட பலர் பங்கேற்றனர்.