முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரை கோரிப்பாளையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுகவைப் பொறுத்தவரை நிரந்தரப் பொதுச் செயலாளர் மறைந்த ஜெயலலிதா ஒருவர்தான். தற்போது ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் இருக்கும்போது பொதுச் செயலாளர் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. எதுவாக இருந்தாலும் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என்றார்.
அதிமுகவினருடன் சசிகலா பேசி வருவது குறித்து கேட்டதற்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்களை சந்திக்கலாம். அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.