தமிழகம்

சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்த கிருஷ்ணகிரி ராணுவ வீரர் உடல் இன்று சொந்த ஊருக்கு வருகிறது

செய்திப்பிரிவு

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் வடக்கு சியாச்சின் சிகரத்தில் அமைந்துள்ள ராணுவ நிலை மீது ஏற்பட்ட பனிச் சரிவில் சென்னை பட்டாலியனைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் பனிச் சரிவில் உயிருடன் புதைந்தனர்.

இதில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமந்தப்பா என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 9 பேர் உயிரிழந்ததாக ராணுவ அதி காரிகள் தெரிவித்துள்ளனர். இவர் களில் 4 வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த குடிசாதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நஞ்சேகவுடு - பையம்மா தம்பதியரின் மகன் ராமமூர்த்தி (26) என்பவரும் ஒருவர்.

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். ஊட்டியில் பயிற்சி பெற்றபின், பஞ்சாப், அசாம், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார். தற்போது சியாச்சின் மலையில் பணியில் இருந்தபோது, பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். இத்தகவலை அறிந்த ராமமூர்த்தியின் பெற்றோர், அவரது மனைவி சுனிதா மற்றும் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதுகுறித்து முன்னாள் படை வீரர் நல துணை இயக்குநர் மணி வண்ணன் கூறும்போது, பனிச்சரி வில் சிக்கிய ராமமூர்த்தியின் உடல் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர் களின் உடல்களும் இன்று விமா னம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது. பின்னர், அங்கிருந்து சொந்த ஊருக்கு அனுப்பப்படு கிறது. ராமமூர்த்தியின் உடல், சென்னையில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படும். அதனை தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும், என்றார்.

SCROLL FOR NEXT