வி.களத்தூர்-பெரம்பலூர் நகரப் பேருந்தில் நேற்று மூதாட்டியிடம் குறைகேட்கும் எம்எல்ஏ பிரபாகரன். 
தமிழகம்

அரசுப் பேருந்தில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்ட எம்எல்ஏ

செய்திப்பிரிவு

பெரம்பலூர் எம்எல்ஏ எம்.பிரபாகரன் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பூலாம்பாடி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி கோனேரிப்பாளையம் வரை பயணம் செய்தார். அப்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள மகளிருக்கான இலவச பேருந்து பயண வசதியில் ஏதாவது குறைகள் உள்ளதா என பேருந்தில் பயணித்த பெண்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், வி.களத்தூர் கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற நகரப் பேருந்தில் எசனை நார்க்காரன் கொட்டாய் பேருந்து நிறுத்தத்தில் ஏறி ஆய்வு செய்து, பயணிகளிடம் குறைகளை கேட்டார்.

SCROLL FOR NEXT