தமிழகம்

மக்களுடன் மெகா கூட்டணி: ராமதாஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் என்பது ஏமாற்று வேலை. ஒரு கட்சியை சார்ந்தவர்கள் பணம் கொடுத்து அதனை வெளியிடுகின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியல் இரண்டு, மூன்று கட்டங்களாக வெளியிடப்படும். மக்களுடன் அமைத்துள்ள மெகா கூட்டணியை கொண்டு, தேர்தலில் 120 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

தமிழகத்தில் அனைத்து தரப்பி னரும் அரசுக்கு எதிராக போராட்டங் களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் எங்கும் போராட்டம்; எல்லோரும் போராட்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திற னாளிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்த அரசு, அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது.

மூத்த குடிமக்களுக்கு அரசு அறிவித்துள்ள இலவச பேருந்து பயண சலுகையால் அவர்களுக்கு உரிய பலன் கிடைக்காது. ஆட்சியின் இறுதி காலத்தில் தற்போது அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளதால் எவ்வித பலனும் இருக்காது. இந்த ஆட்சி முடியப்போகிறது. இப்போது அறிவிப்பதால் பலன் இல்லை. அதிமுக அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் 20 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக ஜெயா தொலைக்காட்சியில் பொது விவாதம் நடத்த முதல்வர் ஜெயலலிதா தயாரா?

தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் என்பது ஏமாற்று வேலை. ஒரு கட்சியை சார்ந்தவர்கள் பணம் கொடுத்து அதனை வெளியிடுகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT