கோவிட்-19 பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகளால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளில் புத்தக வெளியீட்டுப் பணி முதன்மையானது. வருவாய்ப் பற்றாக்குறை,ஊழியர்களால் அலுவலகத்துக்கு வர முடியாத நிலை உள்ளிட்ட காரணங்களால் பதிப்பகப் பணிகளும் அச்சகப் பணிகளும் பெருமளவில் தேக்கமடைந்துள்ளன. இந்தச் சூழலில் நூல்களை அச்சு நூலாகவும் இணைய நூலாகவும் இலவசமாக வெளியிட அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டுகிறது நோஷன் பிரஸ்!
2019 ஏப்ரலில் நோஷன் பிரஸ் தன்னுடைய சுயவெளியீட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.50 கோடி மதிப்புள்ள 30,000-க்கு மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது. சராசரியாக மாதத்துக்கு 2,000 புத்தகங்கள், ஒவ்வொரு 25 நிமிடத்துக்கு ஒரு புத்தகம் என்கிற வேகத்தில் நோஷன் பிரஸ் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது.
7 வயது முதல் 90 வயது வரையுள்ள எழுத்தாளர்களின் நூல்கள் நோஷன் பிரஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர், அரசு அதிகாரிகள், தொழில் நிபுணர்கள், இல்லத்தரசிகள் என சமூகத்தின் பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஆர்வமும் நிபுணத்துவமும் உள்ள தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம். இந்தி, பிற இந்திய மொழிகளில் நூல்கள் வெளியிடப்படுகின்றன. மர்மம் & த்ரில்லர், காதல், சுயசரிதை, மேலாண்மைப் புத்தகங்கள், வணிக சுய உதவி, கவிதை ஆகிய வகை நூல்கள் அதிகம் வெளியிடப்படுகின்றன.
இதுகுறித்து நோஷன் பிரஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நவீன் வல்சகுமார் கூறுகையில் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து எழுத்தாளர்கள் தங்களுக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவும், அவர்களின் ஆர்வம் / நிபுணத்துவத்தை வருவாயாக மாற்றிக்கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர். சிறந்த ஆசிரியர்கள் நோஷன் பிரஸ்ஸில் தங்கள் புத்தகங்களை விற்பனை செய்வதன் மூலம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
நோஷன் பிரஸ்ஸின் ஷிராஜ் அப்துல் கூறும்போது, “இது விரைவானது, எளிதானது, இலவசமானது. புத்தகத்தின் ஒவ்வொரு பதிப்பிற்கும் ஒரு ஐ.எஸ்.பி.என். எண் வழங்குகிறோம், புத்தகங்களை உலகம் முழுவதும் விநியோகிக்கிறோம், யார் தங்கள் புத்தகத்தை வாங்குகிறார்கள், எங்கு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை எழுத்தாளர்கள் நேரடியாக அறிந்துகொள்ள முடியும். புத்தகங்களின் மூலமாகக் கிடைக்கும் லாபத்தில் 70 சதவீதத்தை எழுத்தாளர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்” என்று தெரிவித்தார்
தங்களுக்கு ஆர்வமான துறைகளில் எழுத விருப்பம் இருப்பவர்கள் நூல்களை வெளியிட நோஷன் பிரஸ் அளிக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பணமும் சம்பாதிக்கலாம்.!