கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொழிலாளர் நலன் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்வதில் உள்ள சிரமத்தை களையவும், தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதிலும், நீண்ட காலமாக தேங்கியுள்ள வழக்குகளை தீர்த்து வைப்பதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, நிலுவையில் உள்ள சுமார் 50 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களின் மனுக்கள் அடுத்த 10 நாட்களில் தீர்த்து வைக்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிற்சங்க நிர்வாகிகளின் கோரிக்கையின்படி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முத்தரப்புகுழுக்கள் அமைக்கப்படும். வாரியங்களில், மகப்பேறு உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகளை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும். வரும்காலங்களில் முத்தரப்பு ஆலோசனை கூட்டங்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் கணேசன் கூறினார்.
இக் கூட்டத்தில், தொழிலாளர் நலத் துறையின் செயலர் ஆர்.கிர்லோஷ் குமார், தொழிலாளர் நல ஆணையர் மா.வள்ளலார், கூடுதல் ஆணையர் மு.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.