செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியை ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் புதியதாகநிறுவப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் முன்னிலையில், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இதுகுறித்து ஊரக தொழிற்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
முதல்வரின் ஆணையின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், கரோனா பேரிடர் காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி தனியார் நிறுவனத்தின் மூலம் ரூ.1.5 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையம், இந்தமருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. இதை அமைத்து கொடுத்தற்காக செங்கல்பட்டு பொதுமக்கள் சார்பில் எல்