இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்றவர்கள் இரட்டை இலையை தோற்கடிக்க செயல்பட்டதால் அதிமுக இந்த முறை ஆட்சியை பறிகொடுத்தது என்று டி.டி.வி.தினகரனை மறைமுகமாக குறிப்பிட்டு ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ. குற்றம்சாட்டினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேசியதா வது: இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்றவர்கள் இரட்டை இலையை தோற்கடிக்க செயல் பட்டதால் அதிமுக இந்த முறை ஆட்சியை பறிகொடுத்தது. இந்த துரோகத்தை செய்தவர்கள், அந்த பாவத்துக்கான பரிகாரத்தை தேடித்தான் ஆக வேண்டும் என்றார்.