சென்னை அரசு ஸ்டான்லி மருத் துவமனையில் இளம் பெண்ணின் நெஞ்சு பகுதியின் எலும்புகளை வெட்டாமல் சிறு துவார இதய அறுவை சிகிச்சை மூலம் பழுத டைந்த இதய வால்வை அகற்றி விட்டு செயற்கை வால்வை டாக்டர் கள் வெற்றிகரமாக பொருத்தினர்.
சென்னை கொருக்குப்பேட் டையை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் லாவண்யா (19). கடந்த ஓர் ஆண்டாக கடுமையான மூச்சுத்திணறல் நோயினால் பாதிக் கப்பட்ட லாவண்யா சிகிச்சைக்காக சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், பெண்ணின் இதயத்தின் மைட்ரல் வால்வு பழுதடைந்திருந்ததால் நுரையீரலில் ரத்த அழுத்தம் அதிகமாகி சளி சேர்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து லாவண்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் திட்டமிட்டனர்.
அதன்படி இதய நுரையீரல் அறுவை சிகிச்சைத் துறை டாக் டர்கள் சிவராமன், தாமோதரன், வசுந்தரன் மற்றும் மயக்க மருந்து டாக்டர்கள் பொன்னம்பலம், அனு ராதா ஆகியோர் அடங்கிய குழுவினர் பெண்ணின் நெஞ்சின் வலது பக்கத்தில் மார்பகத்தின் கீழே 5 செமீ அளவுக்கு சிறிய துளையிட்டு விலா எலும்புகளின் வழியாக நவீன கருவிகளை செலுத்தி பழுதடைந்திருந்த மைட்ரல் வால்வை அகற்றிவிட்டு செயற்கை வால்வை வெற்றிகர மாக பொருத்தினர். இந்த சிறு துவார இதய அறுவை சிகிச்சையின் மூலம் விரைவாக குணமடைந்த லாவண்யா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றார்.
இதுதொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், ஆர்எம்ஓ ரமேஷ், டாக்டர்கள் சிவராமன், தாமோதரன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
இந்த அறுவை சிகிச்சை வழக்க மாக நெஞ்சு பகுதியின் முன்பக்கம் எலும்புகளை வெட்டி திறந்துதான் செய்யப்படும். லாவண்யா திரு மணம் ஆகாத இளம் பெண் என்பதால், சிறு துவார இதய அறுவை சிகிச்சை செய்தோம். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.3 லட்சத்துக்கு மேல் செலவாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.