வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி. படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

பத்திரப்பதிவு செய்த தினமே ஆவணங்கள் திரும்ப ஒப்படைப்பு: அமைச்சர் மூர்த்தி தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பத்திரப்பதிவு செய்த தினமே ஆவணங்களை திரும்ப வழங்க உத்தரவிட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவி லான வணிகவரி அலுவலர்கள், மண்டல அளவிலான பத்திரப் பதிவு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியார்கள் சந்திப் பில் அமைச்சர் மூர்த்தி கூறும்போது, ‘‘வேலூர் மண்டலத்தில் உள்ள வணிகர்களுடன் கூட்டம் நடந்த நிலையில் வணிகவரித்துறை அலுவலர்கள், பத்திரப்பதிவு அலுவ லர்கள் கூட்டம் நடந்தது. அவர் களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த காலம் போல் இல்லாமல் மக்கள் எளிதாக வந்து பத்திர அலுவலகங்களில் பதிவு செய்பவர்களுக்கு உரிய நேரத்தில் பதிவு செய்து அன்றைய தினமே ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில், தவறான பத்திரங்கள் பதியக்கூடாது என்றும் வழிகாட்டு மதிப்புக்கு மாறாக பத்திரங்களை பதியக்கூடாது என்றும் கூறப் பட்டுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் சார் பதிவாளர், பத்திரத்தை பதிந்ததும் அதை ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை. ஆனால், சில இடங்களில் தவறாக பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு சென்று அது தீர்ப்பு வழங்கும்பட்சத்தில் உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தத் துறையில் சில நிர்வாக மாற்றங்களை முதல்வரிடம் தெரி வித்து அதற்கு முடிவு கட்டப்படும். குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது துறையின் மேல் அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க சில மாற்றங்களை செய்ய உள்ளோம்.

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். லட்சக் கணக்கில் சிறு, குறு வணிகர்களை நல வாரியத்தில் சேர்க்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினராக சேர 3 மாதத்துக்கு கட்டணம் கட்டத் தேவையில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT