தமிழகம்

அப்போலோ மருத்துவமனைகள் சார்பில் நாடு முழுவதும் 50 நகரங்களில் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சென்னையில் முகாம் தொடக்கம்

செய்திப்பிரிவு

இந்தியா முழுவதும் அப்போலோ மருத்துவமனைகள் சார்பில் 50 நகரங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.

சென்னையில் பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி, சீயோன் மெட்ரிக். பள்ளி, வானகரம் அப்போலோ மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ்ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளியில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி முகாமை நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, ‘‘அப்போலோ மருத்துவமனை, தடுப்பூசி முகாம்கள் மூலம் ஜூலைமாதத்தில் 50 நகரங்களில், 50 லட்சம் பேருக்கு தடுப்பூசிபோடும் பணியைத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு மருந்து நிறுவனங்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மாநிலங்களுக்கும், 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒதுக்கீடு செய்கிறது.

தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அப்போலோ மருத்துவமனையில் இத்தகைய செயல் பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். கறுப்பு பூஞ்சை தொற்றும் தமிழகத்தில் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது" என்றார்.

தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். கறுப்பு பூஞ்சை தொற்றும் தமிழகத்தில் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT