தமிழகம்

மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தால் ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பில்லை: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

செய்திப்பிரிவு

பொங்கலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தால் அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிகட்டு நடத்த அனுமதி வழங்க வாய்ப்பில்லாத நிலையே உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் திண்டுக்கல்லில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் வலியுறுத்தியிருக்க வேண்டும். மக்களவை கூட்டத்தில் மத்திய அரசு இதற்கான மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். ஆனால், கூட்டத்தொடர் முடிவடையும் நிலையில் உள்ளதால் இது சாத்தியமில்லை. எனவே அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும். பொங்கலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் இது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

வெள்ள நிவாரணப் பணிகள், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி, மீனவர் பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகள் இருந்தும் அதிமுக எம்.பி.க்கள் ஒருவர்கூட குரல் கொடுப்பதில்லை.

தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிடங்குகளில் வைக்கப் பட்டிருந்த பல்லாயிரக் கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந் துள்ளன. தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் நெல் வயல்கள் நீரில் மூழ்கின. இதனால் வரும் ஆண்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படும் என்பதால் அரசு வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து தற்போதே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

2016-ல் புதிய வாக்காளர்கள் எங்களை ஆதரிப்பர். மக்கள் மாற்றத்தை விரும்பு கின்றனர். எங்களுக்கு எதிரி திமுகதான் என்றார்.

SCROLL FOR NEXT