தமிழகம்

குமரி, நெல்லை, தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை

செய்திப்பிரிவு

தென் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. பெரும்பாலான பகுதிகளில் நேற்று காலை வரை மழை நீடித்தது.

தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றுமுன் தினம் இரவு முதல் பெய்த மழையால் மீண்டும் வெள்ளம் தேங்கியது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறை முகத்தில் இருந்து விசைப்படகு களில் மீனவர்கள் நேற்று அதி காலை கடலுக்கு கிளம்பிச் சென்றனர். அவர்கள் கடலில் சிறிது தொலைவு சென்ற நிலையில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விசைப்படகுகள் அவசர மாக கரைக்கு திரும்பிவிட்டன. இதேபோல் நாட்டுப் படகு மீன வர்களும் கடலுக்கு செல்ல வில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் பரவலாக நேற்று மழை பெய்தது. திருநெல்வேலி, பாபநாசம், அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, மணி முத்தாறு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய் தது. அதிகபட்சமாக பாபநாசத் தில் 23 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளி லும் தண்ணீர் வரத்து அதிகரித் திருந்தது. நேற்று மதியம் 1 மணி அளவில் பேரருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அனுமதி அளிக்கப்பட்டது.

குமரியில் கடல் சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்று மற்றும் கடல்சீற்றத் தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முழுவதும் கடலில் பேரலைகள் 12 அடி உயரத்துக்கு மேல் ஆக்ரோஷ மாக எழுந்தன. இதனால் கட லோரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாவட் டம் முழுவதும் நேற்று சூறைக் காற்று, கடல் சீற்றம் போன்ற காரணங்களால் மக்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட் டது. கடற்கரை கிராமங்களில் சென் னையில் இருந்து வந்துள்ள மெரைன் போலீஸின் கமாண்டோ வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விசைப்படகுகள் பெரும்பாலும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

SCROLL FOR NEXT