வெப்பச் சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
ஜூலை 1, 2-ல் சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். பிற வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.