தமிழகம்

வண்டலூரில் யானைகளுக்கு கரோனா பாதிப்பு இல்லை

செய்திப்பிரிவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பூங்காவில் 11 சிங்கங்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 3-ம் தேதி உறுதியானது. இதையடுத்து, பூங்காவில் உள்ள யானைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்ய்பபட்டது.

கடந்த 16-ம் தேதி பூங்காவில் வளர்க்கப்படும் பிரகுர்தி மற்றும் ரோகிணி என்ற இரு பெண் யானைகளின் தும்பிக்கை மற்றும் மலம் வெளியேறும் பகுதிகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் பகுப்பாய்வு நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதேபோல, பீஷ்மர் என்ற வெள்ளைப் புலியின் மாதிரியும் கடந்த 25-ம் தேதி ஆய்வுக்காக அனுப்பபட்டது. இந்த மாதிரிகளின் முடிவுகள் நேற்று வெளியாகின.

அதில், யானைகள் மற்றும் வெள்ளைப் புலி ஆகியவை கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT