திறப்பு விழாவுக்கு தயாராகும் பெரியார் பேருந்துநிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யும் மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன். 
தமிழகம்

திறப்பு விழாவுக்கு தயாராகும் பெரியார் நிலையம்: கட்டுமானப் பணிகளை மதுரை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

செய்திப்பிரிவு

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.167 கோடியில் கட்டப்பட்டு வரும் பெரியார் பேருந்து நிலையத்தை அடுத்த மாதம் திறப்பதற்கு மதுரை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்துதல், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைத்தல், வைகை ஆற்றங்கரையினை மேம்படுத்துதல் போன்ற பணிகள் நடக்கின்றன.

இதில் பெரியார் பேருந்து நிலையத்தை ரூ.167.06 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டும் பணி நடக்கிறது. தற்போது பேருந்து நிலையம் இல்லாததால் பஸ்கள் பெரியார் பஸ் நிலைய பகுதியில் சாலையோரங்களில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி விடுகின்றனர். அதனால் இப்பகுதியில் இந்த கரோனா ஊரடங்கு காலத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடித்து அடுத்த மாதம் திறக்க ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்தி கேயன் நேற்று பேருந்து நிலை யம் கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். நகரப் பேருந்துகள் வந்து செல்லும் மற்றும் நிறுத்துவதற்கான இடங்கள், புதிதாக அமைக் கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிப்பறை வசதி, பயணிகள் அமருமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பணி களை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது நகரப் பொறி யாளர் அரசு, உதவி ஆணையாளர் (பொ) சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் சேகர், முருகேசபாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT