முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் அன்று முதல்வர் ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் ரூ.70 கோடியில் 2 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்டமாக கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என்று அறிவித்தார்.
அதற்காக, மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நிலம், உலக தமிழ்ச் சங்க வளாகம் உள்ளிட்ட 6 இடங்கள் பரிசீலனையில் உள்ளன. தற்போது வரை நூலகம் அமைக்கப்படும் இடம் அறிவிக்கப்படவில்லை. அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு ஆகியோர் இந்த 6 இடங்களையும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அவர்களிடம் மாணவர்கள், பொதுமக்கள் எளி தாக வந்து செல்லும் வகையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் சரியான தேர்வாக இருக்கும் என்று உள்ளூர் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
அவர்களும் அதே இடத்தையே முதல்வரிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மாட்டுத் தாவணி பஸ் நிலையம் அருகே இந்த பிரம்மாண்ட நூலகம் அமைய அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விரைவில் முதல்வர் ஸ்டாலின், நூலகம் அமைய உள்ள இடத்தை தேர்வு செய்து அறிவிப்பார் என்று அமைச் சர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் அமைய உள்ள பிரம்மாண்ட நூலகத்தின் மாதிரி வரைபடத்தை தயார் செய்யும் பணியில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் இடத்தை அறிவித்ததும் உடனடி யாக பணிகளை தொடங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் 7 தளங்கள் கொண்ட தாக மாதிரி வரைபடத்தில் வடி வமைக்கப்பட்டுள்ளது.
முழுமையாக குளிரூட்டப் பட்ட 24 அறைகள் அமைக்கப் படுகின்றன. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், வர லாற்று ஆர்வலர்கள், அறிவியல் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன் படுத்தும் வகையில் இந்த நூலகம் 24 பிரிவுகளுடன் அமைகிறது.
இளைய சமுதாயத்தினர் மொபைல் போனில் மூழ்கி வாசிப்புத்திறன் குறைந்துவிட்ட இந்த காலகட்டத்தில் மதுரையில் இத்தகைய பிரம்மாண்ட நூல கம் அமைப்பது வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் படித்த இளைஞர்கள் அதிகளவு நூலகத்தை பயன்படுத்தி மத்திய, மாநில அரசு துறை பணிகளில் சேர பெரும் உதவியாக இருக்கும் என்று தமிழ் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.