திருமங்கலம் அருகே குன்னத்தூரில் நடந்த அதிமுக மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார் ஆர்.பி. உதயகுமார். 
தமிழகம்

இலவச மடிக்கணினி, 2 ஜிபி டேட்டா தொடர்ந்து வழங்க வேண்டும்: அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில், திருமங்கலம் அருகே குன்னத் தூரில் பயிற்சி முகாம் நடந்தது.

இதில் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் 65 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல முன்னாள் முதல்வர் பழனிசாமி இலவசமாக 2 ஜிபி டேட்டாவை வழங்கினார். இந்த இரு திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, முகாமுக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திரபாண்டியன் தலைமை வகித்தார்.

உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT