தமிழகம்

‘நீட்’ பாதிப்பை கண்டறிய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் பாஜக வழக்கு

செய்திப்பிரிவு

ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்துஅறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதற்கு தடை விதிக்க கோரிதமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019-ல் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு எதிராக மாநில அரசு செயல்பட முடியாது. மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்கவேண்டும். ஆனால், அதைமீறும் வகையில் தமிழக அரசுகுழு அமைத்துள்ளது ஏற்புடையது அல்ல.

உச்ச நீதிமன்ற உத்தரவுஅடிப்படையிலும், தேசிய நலன் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மாணவர்களிடம் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு இந்த விவகாரத்தை அரசியலாக்க நினைக்கிறது. எனவே, இக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT