தமிழக முதல்வரிடம் விஐடி வேந்தர்கோ.விசுவநாதன் 2-ம் தவணை கரோனா நிதியாக ரூ.25 லட்சம் தொகையை வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பெருந்தொற்று நிவாரண நிதிக்கு விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் மற்றும் ஜி.வி.செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, கரோனா 2-ம் அலை தொடங்கியபோது விஐடிபல்கலைக்கழகம் சார்பில் கரோனாநிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பெருந்தொற்று நிவாரணநிதிக்கு மின்னணு பரிமாற்றம் மூலமாக ரூ.1.25 கோடி வழங்கப்பட்டது. மொத்தத்தில் கரோனா நிவாரணப் பணிகளுக்காக விஐடி சார்பில் ரூ.1.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.