திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்குக் காரணம், அந்தத் துறை அமைச்சராக உள்ளவருக்கு மின் துறை குறித்து புரிதல் இல்லாதது தான். திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மின்வெட்டு வந்துவிடும். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது திமுகவும், மின்வெட்டும் தான்.
தமிழகம் முழுவதும் மின் பராமரிப்புப் பணிகளை 4 தினங்களில் செய்து முடித்து விடலாம். கடந்த அதிமுக ஆட்சியில் 7 ஆண்டுகள் மின் துறை அமைச்சராக இருந்த எனக்கு மின்வெட்டுக்கு அணில்கள் தான் காரணமா? எனத் தெரியவில்லை என்றார்.