தமிழகம்

கிராம குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் பழங்குடியின பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் வாழ்த்து

செய்திப்பிரிவு

கோவை மதுக்கரை வட்டம் சின்னாம்பதி பழங்குடியின கிராமத்தில் கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சண்முகம் என்பவரது மகள் சந்தியா, கரோனா காலத்தில் அந்த கிராமத்தில் உள்ள பழங்குடியின மாணவர்கள் 20 பேருக்கு கல்வி பயிற்றுவித்துவருவதை அறிந்து, அவரது வீட்டுக்கு சென்று ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார். அதோடு, சந்தியாவுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். தொடர்ந்து புதுப்பதி பழங்குடியின கிராமம், வாளையார் சோதனைச் சாவடி ஆகிய பகுதிகளிலும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT