கோப்புப் படம் 
தமிழகம்

தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 40 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி

செய்திப்பிரிவு

உத்திரமேரூர் அருகே இயங்கி வரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 40 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் அரசு அனுமதியோடு தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, 74 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களில், பெரும்பாலான குழந்தைகள் ஆதரவற்றவர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் மூலம் 33 சிறுவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட 7 மாணவர்களுக்கும் தொற்று உறுதியாகிறது.

தொற்று உறுதியாகியுள்ள குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

தொற்றால் பாதிக்கப்படாத மற்ற குழந்தைகள் அவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காப்பக ஊழியர் ஒருவர் மூலம் குழந்தைகளுக்கு தொற்று பரவியுள்ளது அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT