விருத்தாசலத்தில் மின்மாற்றியில் இறந்து கிடந்த அணில்களுடன் மின் வாரிய ஊழியர். 
தமிழகம்

விருத்தாசலத்தில் மின்மாற்றியில் சிக்கிய அணில்களால் மின்வெட்டு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மின்வெட்டுக்கு காரணம் அணில் என மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்த தகவல், விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் விருத்தாசலத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின்வெட்டுக்கான காரணம் குறித்து ஆராய்ந்தனர். அப்போது விருத்தாசலம் பாலக்கரையில் அரச மரம் அருகேவுள்ள மின்மாற்றியில் அணில்கள் இறந்து கிடப்பதை கண்டனர். இதையடுத்து அணில்கள் அகற்றிய பின் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

பின்னர் மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், "மரத்தில் விளையாடும் அணில்கள் மின்கம்பியில் பாய்ந்தபோது, மின்சாரம் தாக்கி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் அணில்களும் உயிரிழந்துள்ளன" என்றனர்.

அணில்கள் மின்சாரக் கம்பியில் ஏறியதால், மின்இணைப்பில் கோளாறு ஏற்பட்டு விருத்தாசலம் பகுதியில் சுமார் அரை மணிநேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவியது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT