திருச்சி மலைக்கோட்டை கோயிலில் நிவாரண உதவிகளை வழங்குகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் எஸ்.இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ உள்ளிட்டோர். 
தமிழகம்

கோயில்களில் ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு கரோனா நிவாரண உதவி: அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினர்

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஊதியமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யார்கள், பூசாரிகள் உள்ளிட்டோருக்கு கரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு பயனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். இங்கு ரங்கம் ரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில் ஆகியவற்றில் பணியாற்றும் அர்ச்கர்கள், பட்டாச்சார்யார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணி யாளர்களுக்கு ரூ.4,000 ரொக்கம் மற்றும் 10 கிலோ அரிசி, 15 வகை யான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ எம்.பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் அர.சுதர்சன், ஸ்ரீ ரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, சமயபுரம் கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, உதவி ஆணையர்கள் கு.கந்தசாமி, செ.மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, ஸ்ரீ ரங்கம் கோயிலில் ரூ.16.32 கோடியில் நடைபெற்று வரும் மதில் சுவர் பராமரிப்புப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மலைக்கோட்டையில்...

திருச்சி மலைக்கோட்டை தாயு மான சுவாமி கோயிலில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச் சியில், மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.

இங்கு மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில், உபகோயிலான அய்யனார் கோயில் ஆகியவற்றில் பணி யாற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட் டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ், கோட்டாட் சியர் என்.விஸ்வநாதன், உதவி ஆணையர்கள் எஸ்.மோகன சுந்தரம், த.விஜயராணி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT