திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத். 
தமிழகம்

பிற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் ‘நீட்' தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் குழப்பதை போக்க தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை நடத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசிய அர்ஜூன் சம்பத் அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அதற்கான சான்றிதழ் முறையாக வழங்கப்படுவதில்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பவர் களுக்குக்கூட வேறு சில நோயால் உயிரிழந்ததாக கூறி கரோனா சான்றிதழ் வழங்க அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கிறது.

கரோனா தொற்றால் உயிரிழந் தவர்களுக்கும் அதற்கான சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்படுவதில்லை. உறவி னர்கள் அலைக்கழிக்கப்படு கிறார்கள். கரோனா சான்றிதழ் உடனடியாக வழங்காததால் அந்த குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரண தொகை கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. எனவே, சான்றிதழ் கிடைக்க எளிமையான நடைமுறைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மட்டுமே கோயில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் கோயில்கள் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது வரவேற் கத்தக்கது. ஆனால், கோயில் நிலங்களை பட்டா போட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதை இந்து மக்கள் கட்சி எதிர்க்கிறது. கோயிலுக்கு சொந்தமான சொத்தை வேறு பெயரில் மாற்ற முடியாது.

அதேபோல, தமிழகத்தில் உள்ள 42 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படத்தாதது கண்டிக்கத்தக்கது. அதேபோல, சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியின் பெயரை நீக்கியதும் கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ‘நீட்’ தேர்வை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தமிழக அரசு ‘நீட்’ தேர்வுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது வருத்த மளிக்கிறது. மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களை குழப்பாமல் இருக்க தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

கரோனா நிவாரண தொகை மற்றும் கரோனா நிவாரணப் பொருட்கள் ஏழை, எளிய மக்களுக்கு முறையாக போய் சேருகிறதா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை போல கல்வி கடன் ரத்து செய்வது, ஒவ்வொரு குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவது ஆளுநர் உரையில் இல்லை. இதற்கான விளக்கத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றார்.

அப்போது, மாநில பொதுச் செயலாளர் செந்தில், மாநில அமைப்பாளர் செல்வம் உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT