தமிழகம்

பொங்கல் திருநாளன்று ஜல்லிக்கட்டு நடக்குமா?- போராட்டத்தில் திமுகவுக்கு போட்டியாக குதித்த அதிமுக

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அருகே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மாவட்ட திமுக சார்பில் 28-ம் தேதி அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற இருக்கிறது. இந்நிலையில், அதிமுக சார்பில் பாலமேடு, அலங்காநல்லூர் கிராமங்களில் நேற்று சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்றன.

கடந்த ஆண்டு மே 7-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன் றம் தடை விதித்தது.

இந்நிலையில் பொங்கல் பண் டிகை நெருங்கிவிட்ட நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென் மாவட்ட கிராமங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், தென் மாவட்டங்களில் வாக்கு வங்கியைக் குறி வைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு ஜல்லிக் கட்டு நடத்த ஆதரவு தெரிவித்து வருகின்றன.

மாவட்ட திமுக சார்பில், அலங்காநல்லூரில் வரும் 28-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தேமுதிக, பாமக, மற்றும் மதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளும் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றன. மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சமீபத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில் தற்போது அதிமுகவும் களமிறங்கி உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தெரி வித்து, அக்கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளரும், மேயரு மான வி.வி. ராஜன்செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் அலங்காநல்லூர், பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு காளை களுக்கு சிறப்பு யாகம், கோ பூஜைகளை செய்தனர்.

இந்நிலையில், அலங்காநல் லூர் பேரூராட்சி, அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு பேரூராட்சி களில் நேற்று நடைபெற்ற கூட்டத் தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT