ம.பொ.சி.யின் 116—வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். உடன் ம.பொ.சி. அறக்கட்டளை நிறுவன தலைவர் மாதவி பாஸ்கர், பாஸ்கர், டாக்டர் செந்தில் ம.பொ.சி. உள்ளிட்டோர். படம் க.ஸ்ரீபரத் 
தமிழகம்

ம.பொ.சிவஞானம் 116-வது பிறந்த தினம்: தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் மலர் தூவி மரியாதை

செய்திப்பிரிவு

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 116-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானத்தின் பிறந்த தினமான ஜூன் 26-ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவரது 116-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தி.நகரில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு நேற்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த.வேலு, நா.எழிலன் மற்றும் ம.பொ.சி குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT