காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் கரோனா சிறப்பு நிதி வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி நேற்று ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் கரோனா சிறப்பு நிதி இரண்டாம் கட்டமாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
கரோனா விதிகளைப் பின்பற்றி முதலில் டோக்கன் வழங்கப்பட்டு, பின்னர் பகுதி பகுதியாக பொதுமக்களை வரவழைத்து ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
பஞ்சுப்பேட்டை, ஆசிரியர் நகர் பகுதிகளில் இந்தப் பணியைமாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கரோனா விதிகளை முறையாகப் பின்பற்றி பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், தேவையற்ற தாமதம் செய்யக் கூடாது, அதே நேரத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.