தமிழகம்

ஹெச்.ராஜாவைக் கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து ராஜினாமா: மாநில அமைப்பு பொதுச்செயலாளர் விசாரணை

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜாவை கண்டித்து அடுத் தடுத்து நிர்வாகிகள் ராஜினாமா செய்ததை அடுத்து, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் நேரில் விசாரணை நடத்தினார்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா 2019-ம் ஆண்டு நடந்த சிவகங்கை மக்களவைத் தேர்தலில் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வி அடைந்தார். தொடர்ந்து சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட் பாளர் மாங்குடியிடம் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் தனது தோல் விக்கு கட்சி நிர்வாகிகள் சிலர் தான் காரணம் என ஹெச்.ராஜா கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஹெச்.ராஜாவை கண்டித்து காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றியத் தலைவர் பாலா, திருப்புவனம் மேற்கு ஒன்றியத் தலைவர் பாலசுப்ரமணியன் உள் ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்தனர்.

தேர்தல் நிதி

மேலும் மாவட்டத் தலைவர் செல்வராஜும் ராஜினாமா செய் வதாக மாநிலத் தலைமையிடம் தெரிவித்தார். தேர்தல் நிதியை முறையாகச் செலவழிக்கவில்லை எனவும் புகார் எழுந்தது. தொடர்ந்து மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் மாநிலத் தலைமை அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து காரைக்குடிக்கு வந்த மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், மாநிலத் துணை பொருளாளர் சிவசுப்ரமணியன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடம் தனியாக விசாரணை நடத்தினர்.

அவர்கள் தேர்தல் தோல் விக்கான காரணம், நிர்வாகிகளுக்கு முறையாக தேர்தல் நிதி வந்ததா, சரியாக செயல்படாத நிர்வாகிகள் விவரம் குறித்து கேட்டறிந்தனர்.

இதுகுறித்து மாவட்டத் தலைவர் செல்வராஜ் கூறுகையில், ‘‘தேர்தல் தோல்வி குறித்து விசாரணை நடந்தது. மற்றபடி நிர்வாகிகள் ராஜினாமா குறித்து பேசப்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறேன்,’’ என்றார்.

SCROLL FOR NEXT