தமிழகம்

தேசியத்தை கேள்வி கேட்கும் பேச்சுகள் அதிகரித்துள்ளன: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

காரைக்குடியில் பாஜக தலைவர் ஹெச்.ராஜா கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் தேசியத்தையே கேள்வி கேட்கும் பேச்சுகள் அதிகரித்துள்ளன.

எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில், ‘ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகமே தலைநிமிர்ந்தது,’ என்றார். இதுபோன்ற தலைகுனிவு வேறில்லை. தமிழகத்தின் செண்பகராமன் பிள்ளை தான் ஜெய்ஹிந்த் என்று முன்மொழிந் தார். அதன் பிறகுதான், நேதாஜி ஜெய்ஹிந்த் என்பதை பிரபலப்படுத்தினார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கூட்டம் முடிந்த பிறகு 3 முறை ஜெய்ஹிந்த் என்பார். ஆனால், திமுக கூட்டணி எம்எல்ஏ இப்படி கூறியதை காங்கிரஸார் எப்படி சகித்துக் கொள்கிறார்கள்.

தேசியத்தை கேள்வி கேட்கும் பேச்சுகள்தற்போது அதிகரித்துள்ளன. பிரிவினைவாதத்தை வளர்க்கும் சூழ்நிலையை உருவாக்க திமுக அரசு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது. பூஜை முறைகள் குறித்து நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தும், இஷ்டம் போல் பேசுவது, அதன் சொத்துகளைப் பாதுகாக்காமல் இருப்பது, இந்து பள்ளிகள் மீது குறி வைத்து நடவடிக்கை எடுப்பது திமுகவின் திட்டமிட்ட செயல் என்றார்.

SCROLL FOR NEXT