தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே ஈச்சாந்தா ஓடை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் விக்னேஷ்(27). இவரது மனைவி சண்முகசெல்வி(25). இவர்கள் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 3 வயதில் கமலேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சண்முகசெல்வி, கமலேஷ் ஆகியஇருவரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து எஸ்.பி.ஜெயக்குமார் சம்பவ இடத்தில் விசாரணைமேற்கொண்டார்.
அப்போது, சண்முகசெல்வியின் தந்தை செல்லத்துரை (58), தனது மகளை கணவர் விக்னேஷ் (27), அவரது தாய் மல்லிகா (52),தந்தை லெட்சுமணன்(60) மற்றும்சகோதரர் சுரேஷ் (28) ஆகியோர் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதனால் சண்முகசெல்வி தற்கொலை செய்து கொண்டதாகவும், 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் புகார் அளித்தார்.
முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான தனிப்படையினர் விக்னேஷ், சுரேஷ், மல்லிகா ஆகிய மூவரையும் 16 மணி நேரத்தில் கைது செய்தனர்.