வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 18 நாட்கள் உள்ளன. இந்நிலையில், வடமாவட்டங்களில் மழை குறைந்து, தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், மாலத்தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் பகுதியி்ல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, இன்று முதல் வரும் 17ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.