ராமதாஸ்: கோப்புப்படம் 
தமிழகம்

வனச்சரகர் பதவி உயர்வை இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்குக: ராமதாஸ்

செய்திப்பிரிவு

வனச்சரகர் பதவி உயர்வை இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 26) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் வனச்சரகர் பணியிடங்கள் மிக அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ள நிலையில், வனக்காப்பாளர்களுக்கு வனச்சரகர் பதவி உயர்வு வழங்குவது தாமதப்படுத்தப்படுகிறது. பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு, 10 மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை!

வனக்காப்பாளர்கள் பலருக்கு 16 ஆண்டுகளில் கிடைத்திருக்க வேண்டிய இரண்டாவது பதவி உயர்வு 21 ஆண்டுகளாகியும் இன்னும் வழங்கப்படாதது சமூக அநீதி. எனவே, வனச்சரகர் பதவி உயர்வை இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT