டிராக்டர் கடன் தவணையை செலுத்தக் கோரி வங்கி, தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து நெருக்கடி தருவதாகக் கூறி டிராக்டர்களுடன் சாக்கோட்டை விவசாயிகள் போராட்டம் நடத் தினர்.
காரைக்குடி அருகே சாக் கோட்டை வட்டாரத்தில் நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசு, தனியார் வங்கிகள், நிதி நிறு வனங்களில் டிராக்டர் கடன் பெற்றுள்ளனர். தற்போது கரோனா ஊரடங்கால் விவசாயப் பொருட் களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. விவசாயப் பணி களும் பாதிக்கப்பட்டன.
இதனால் மாதந்தோறும் கடன் தவணைத்தொகை செலுத்த முடி யாமல் விவசாயிகள் தவிக்கின் றனர். வங்கி, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று கடன் தவ ணையைச் செலுத்த தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாகக் கூறப் படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாக்கோட்டையில் அறந்தாங்கி சாலையில் டிராக்டர்களுடன் விவ சாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஊரடங்கு அமலில் உள்ளதால் போராட்டம் நடத்தினால் வழக்குப் பதிவோம் என போலீஸார் எச்சரித்தனர். இதையடுத்து விவசாயிகள் முழக்கமிட்டபடியே அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விவசாய டிராக்டர் உரிமை யாளர்கள் நல சங்கத் தலைவர் முத்துமாணிக்கம் கூறியதாவது: கரோனா ஊரடங்கால் டிராக்டரால் மேற்கொள்ளப்படும் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் விவசாயப் பொருட்களை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாததால், விலையும் கிடைக்கவில்லை.
இதனால் கடன் தவணைத் தொகையைச் செலுத்த முடிய வில்லை. வங்கி, தனியார் நிதி நிறுவனங்களிடம் பேசி கடன் தவணை செலுத்துவதற்கு அவ காசம் பெற்றுத் தர முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.