தமிழகம்

ஒருங்கிணைந்த பேருந்து நிலைய அறிவிப்பு எப்போது? - எதிர்பார்ப்பில் திருச்சி மாநகர மக்கள்

ஜெ.ஞானசேகர்

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு எப்போது வரும் என்று மாநகர மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருச்சி மாநகரம். இங்கிருந்து மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் சில மணி நேரங்களில் சென்றுவிடலாம். திருச்சி மத்திய பேருந்து நிலையம் வழியாக தினமும் 2,500-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இதனால், மாநகரிலும், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்பகுதி சாலைகளிலும் எப் போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து, போக் குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் திருச்சியில் ஒருங்கி ணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என 1996-ம் ஆண்டு முதலே அனைத்துத்தரப்பு மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி, கடந்த திமுக ஆட்சியில் இதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு, பஞ்சப்பூர் பகுதியில் 244.28 ஏக்கரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த இடத்தை அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினும் நேரில் பார்வையிட்டுச் சென்றார். அதன் பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

2011-ல் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு பஞ்சப்பூரை கைவிட்டு புதிய இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால், இடத்தை இறுதி செய்ய முடியாத நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக பதவியேற்ற பழனிசாமி, திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், அது வெறும் அறிவிப்புடன் நின்றுவிட்டது.

இந்தநிலையில், திமுக மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலை யில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக கே.என்.நேரு பொறுப்பேற்றுள்ளதால் ஒருங்கி ணைந்த பேருந்து நிலையப் பணிகள் விரைந்து தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலரகள் கூறியது: திருச்சியில் ஒருங்கி ணைந்த பேருந்து நிலையம் அமைந்தால் மாநகர் மேலும் வளர்ச்சியடையும். இதற் கான அறிவிப்பு நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அதுகுறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இடம் தேர்வு செய்யும் நடவடிக்கையில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலை யில், இடத்தை இறுதி செய்வ தில் நிலவும் தாமதம் காரணமாக பஞ்சப்பூர் பகுதியில் மேற்கொள் ளவிருந்த சூரியஒளி மின் சக்தி உற்பத்தி மையம், வர்த்தக மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அலுவலர் களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

கரோனா பரவல் தடுப்பு நடவடிக் கைகளில்தான் தற்போது முதல்வர் உட்பட அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது தொடர் பான அறிவிப்பை முதல்வரோ அல்லது நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவோ மிக விரைவில் அறிவிப்பார்கள். ஒருங்கிணைந்த பேருந்து நிலை யத்துக்கான இடம் அறிவிக்கப்பட் டவுடன், பிற வளர்ச்சிப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT