சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத் தில் மழை வெள்ளத்தில் சிக்கி யிருந்த 2 லட்சம் பேரை தீயணைப் புத் துறையினர் மீட்டுள்ளனர்.
தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புக்குழு, ராணுவம், விமானம், கடற்படையினர் மீட்டனர். இதில் தீயணைப்புத்துறையினர் மட்டுமே 2 லட்சத்து 4 ஆயிரத்து 682 பேரை மீட்டுள்ளனர்.
இதுபற்றி தீயணைப்புத்துறை சென்னை மாவட்ட அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
சென்னை, காஞ்சிபுரம் மாவட் டங்களில் வெள்ளத்தில் சிக்கியவர் களை மீட்பதற்காக சுமார் 2 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. சென்னை, திருவள்ளூர் மாவட்டத் துக்கு உட்பட்ட பகுதிகளான எம்.கே.பி.நகர், வில்லிவாக்கம் சிட்கோ நகர், தாம்பரம், முடிச்சூர், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த 2 லட்சத்து 4 ஆயிரத்து 682 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். இவை தவிர 100-க்கும் மேற்பட்ட செல்லப் பிராணிகள், விலங்குகளும் மீட்கப்பட்டன.