தமிழகம்

ஹாட் லீக்ஸ்: புலம்ப ஒரு இடம் வேணுமில்ல..!

செய்திப்பிரிவு

கரோனாவால் சொல்லரங்க மேடைகள் கிடைக்காமல் வீட்டிலேயே இருக்கும் நெல்லை கண்ணன், தனது முகநூல் பக்கத்துக்கு திடீரென உயிர்கொடுத்துள்ளார். அதில், தனது கடந்தகாலம் தொடங்கி மத்திய அரசின் கசந்த காலம் வரை தினமும் நீளமான பதிவுகளை வாரி இறைக்கிறார். ஊடகங்களில் மத்திய அரசை விமர்சனம் செய்து வெளியாகும் செய்திகளை அப்படியே பகிர்ந்து, தனது சுயகருத்தையும் சொல்லிவிடுகிறார். “நமக்கும் நம்ம கருத்தைப் பேசிப் புலம்ப ஒரு இடம் வேணுமில்ல... மேடையில்லைன்னு ஓய்ஞ்சிட முடியுமா?” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பும் நெல்லை கண்ணன், தனக்காக அட்மின் ஒருவரையும் நியமித்திருக்கிறார். ஆக, ஏடாகூடமாக ஏதாகிலும் பதிவிட்டாலும் அண்ணாச்சிக்கு தப்பிக்க வழியிருக்கு!

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

SCROLL FOR NEXT