சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியது தொடர்பாக அதிமுகவில் இருந்து மேலும் சில நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு அறிவித்தார்.
தேர்தல் முடிந்து எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக அமர்ந்துள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா தொலைபேசியில் தொடர்ந்து பேசி வருகிறார்.
இவ்வாறு சசிகலாவுடன் பேசும் நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வகையில், நேற்று சிலநிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, கட்சியின் கொள்கை,குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக, சேலம்புறநகர் மாவட்டத்தின் மாணவர்அணி செயலாளர் கே.ராமகிருஷ்ணன், சிவகங்கையை சேர்ந்த ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.சரவணன், மகளிர் அணி இணை செயலாளர் ஆர்.சண்முகப்பிரியா, திருநெல்வேலியை சேர்ந்த எம்ஜிஆர் மன்ற முன்னாள் இணை செயலாளர் திம்மராஜபுரம் ராஜகோபால், தச்சநல்லூர் தொகுதி மாணவர் அணி இணை செயலாளர் டி.சுந்தர்ராஜ் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.