பாஜக தரப்பில் இருந்து அமைச்சர்களாக ஆக இருக்கும் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகிய இருவரும் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 
தமிழகம்

முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆசிர்வாதம்

செய்திப்பிரிவு

அமைச்சர்கள் பட்டியலை ஆளுநரிடம் அளித்ததைத் தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வென்றுஆட்சியமைத்துள்ளது. முதல்வராக ரங்கசாமியும், பேரவைத்தலைவராக செல்வமும் பதவியேற்றுள்ளனர். 50 நாட்களுக்குப் பிறகுஅமைச்சர்கள் பட்டியலை முதல்வர் ரங்கசாமி நேற்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்று துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் அளித்தார். ஆளுநரும் அதனைமத்திய உள்துறைக்கு அனுப்பி யுள்ளார்.

இச்சூழலில் அமைச்சர்களாக ஆக இருககும் பாஜக எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் மற்றும் பேரவைத்தலைவர் செல்வம் ஆகியோர் நேற்று சட்டப்பேரவை அலுவலகத்தில் உள்ள முதல்வர் அறைக்கு வந்தனர். அங்கு பாஜக எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

பின்னர், நமச்சிவாயம் கூறுகையில், "ஆளுநரிடம் முதல்வர் அமைச்சர்கள் பட்டியலை அளித்துள்ளார். அமைச்சரவை பதவியேற்பு தேதியை முதல்வரிடம் நாங்கள் அளித்துள்ளோம். அந்த நாளில் பதவியேற்க கோரிக்கை வைத்துள்ளோம்.

முதல்வரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் முதல்வர் முறைப்படி பதவி யேற்கும் தேதியை அறிவிப்பார்." என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT