ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தொழிலாளர்கள் தங்களுடைய வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால், சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கும் என தெரிகிறது.
இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான சமையல் எரிவாயு சிலிண்டர் (கேஸ்) நிரப்பும் தொழிற்சாலை பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில் உள்ளது.
இங்கு கடந்த சில நாட்களாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டது.
நாள் ஒன்றுக்கு 200 லாரிகளில் சிலிண்டர்கள் நிரப்பி அனுப்பப்பட்டு வந்த நிலையில், இப்போராட்டத்தின் காரணமாக 60 லாரிகளில் மட்டுமே சிலிண் டர்கள் நிரப்பி அனுப்பப்பட்டன. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இப்பேச்சுவார்த்தையில் தொழி லாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை யடுத்து தொழிலாளர்கள் போராட் டத்தை விலக்கிக் கொண்டனர்.
இதனால், சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.