தமிழகம்

ஹாட் லீக்ஸ்: எஸ்கேப் ஆன எல்லோ ஆர்மி!

செய்திப்பிரிவு

ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது கைநிறைய தாயத்துக் கயிறுகளும் மஞ்சள் சட்டையுமாய் மங்களகரமாய் காட்சியளிப்பார். அண்ணனைக் குஷிப்படுத்திப் பார்க்க வேண்டும் என்பதற்காக அவரது அடிவருடிகள் சிலரும் அவர் வழியில் மஞ்சள் காஸ்ட்யூமுக்கு மாறினார்கள். இவர்களை, ‘எல்லோ ஆர்மி’ என்று அதிமுக வட்டாரமே ஒரு சைஸாக கிண்டலடித்தது. ஆட்சி மாறியதும் ராஜேந்திர பாலாஜியை பொது இடங்களில் அதிகம் பார்க்கமுடியவில்லை. அவரைப் பின் தொடர்ந்து போற்றிப் பாடிய ‘எல்லோ ஆர்மி’ ஆட்களும் இப்போது ஜீன்ஸ் பேன்ட் - ஒயிட் சட்டை காஸ்ட்யூமுக்கு மாறிவிட்டார்கள். கூடுதல் தகவல்: கூடிய சீக்கிரமே ராஜேந்திர பாலாஜி வீட்டை நோக்கி ஊழல் தடுப்புப் போலீஸ் வண்டியைக் கிளப்பலாம் என்கிறார்கள்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்

SCROLL FOR NEXT