தமிழகம்

மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் நிதி பற்றாக்குறை குறைப்புக்கான கால வரம்பை நீட்டிக்க மசோதா

செய்திப்பிரிவு

வருவாய், நிதிப் பற்றாக்குறையை மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 3 சதவீதம் வரை குறைப்பதற்கான கால வரம்பை 2024மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க வகை செய்யும் மசோதா, பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்று தொடங்கும் முன்பு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தமசோதாவில் கூறியுள்ளதாவது:

மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் கடன் பெறுவதற்கான வரம்பை 2021 முதல் 2026 வரையிலான நிதி ஆண்டுகளில் முறையே 4 சதவீதம், 3.5 சதவீதம்,3 சதவீதமாக 15-வது நிதிக்குழு பரிந்துரைந்துள்ளது. அதன் அடிப்படையில் நிதி, வருவாய் பற்றாக்குறையை மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 3 சதவீதம் குறைப்பதற்கான காலவரம்பை 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க 2003 தமிழ்நாடு நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவுசெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பேரவைக்கு மாற்றுத் தலைவர்கள்

பேரவைத் தலைவர் அப்பாவுபேசும்போது, “சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்களாக க.அன்பழகன் (கும்பகோணம்), எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), டிஆர்பி ராஜா(மன்னார்குடி), கம்பம் ராமகிருஷ்ணன் (கம்பம்), துரை சந்திரசேகரன் (திருவையாறு), தா.உதயசூரியன் (சங்கராபுரம்) ஆகியோர் செயல்படுவார்கள்’’ என்று அறிவித்தார்.

மதிப்பீட்டு குழு, பொது கணக்குகுழு, பொது நிறுவனங்கள் குழுஆகியவற்றுக்கு தலா 16 உறுப்பினர்கள், அவை உரிமைக் குழுவுக்கு14 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் 24-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.

SCROLL FOR NEXT