மந்தகதியில் நடக்கும் பெரியார் பஸ் நிலைய கட்டுமானப் பணிகள். படம்: ஜி.மூர்த்தி 
தமிழகம்

மந்தகதியில் பெரியார் பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் நிலையம் ரூ.160 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் 2 ஆண் டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், பணிகள் நிறை வடைந்து பயன்பாட்டுக்கு வருவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

இத்திட்டம் தொடக்கத்திலேயே பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் பகுதி குறைவாகவும், வணிக வளாகப் பகுதி அதிகமாகவும் கட்டப்படுவதாக சர்ச்சை எழுந்தது.

மேலும் பஸ் நிலையத்தின் மேல்பகுதியில் பழங்காநத்தம் சாலையையும், சிம்மக்கல் சாலையையும் இணைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் ஒன்றும் கட்டும் வகையில்தான் பெரியார் பஸ் நிலையம் வடி வமைக்கப்பட்டது.

அதன்பிறகு பாலம் கட்டும் பணி கைவிடப்பட்டு, அனைத்து வாகனங்களும் பஸ் நிலையத் துக்குள் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் ஏற்கெ னவே நீடித்த போக்குவரத்து நெரிசல் புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தபிறகும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

பலத்த மழை பெய்தால் பஸ் நிலையப்பகுதியில் கடந்த காலத்தில் மழைநீர் தெப்பம் போல் தேங்கி நிற்கும். புதிய வடிவமைப்பில் மழைநீர் வழிந்தோடுவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளிக் கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது வரை மழைநீர் வழக்கம்போல் தேங்கி நிற்கிறது. இப்படி பல்வேறு குறைபாடுகளுடன் பஸ்நிலையம் கட்டுமானப் பணிகள் நடக்கும் நிலையில், அதையும் விரைவாக முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.

முழு ஊரடங்கு விலக்கப்பட்டு மீண்டும் பஸ் போக்குவரத்து முழுவீச்சில் தொடங்கப்பட்டால் பெரியார் பஸ் நிலையம் பகுதியில் மக்கள் வெயில், புழுதி மற்றும் தேங்கும் மழைநீருக்கு மத்தியில் காத்திருக்கும் அவலம் தொடர வாய்ப்புள்ளது.

பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் மாநகர பஸ்கள் இயக்கப்படும் நிலையில் பஸ் நிலையமே இல்லாமல் மக்கள் அவதிப்படுவது கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. மேற்குப் பகுதியில் முழுவதுமாக பணிகள் நிறைவடைந்து விட்டன. மின்சார வேலைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டியுள்ளது. கிழக்கு பகுதியில் காம்ப்ளக்ஸ் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விரைவில் பஸ் நிலையத்தைத் திறக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன’’ என்றனர்.

SCROLL FOR NEXT